Lyrics: Henry Costa/Jeewaka Weerasinghe/Kishawn Christy Ravindran Music: Jerome Shamen Perera அந்தி மழை முகிலில் அந்த ஆழமர நிழலில் விளையாடி வளர்ந்தோம் வயலில் பிஞ்சுத் தூய மனதில் ஏதும் அறியா வயதில் விதைத்தாயே காதல் உயிரில்
மனம் நிறைந்திங்கு சிறகடிக்குது மானே எனையும் உனதருகில் தொலைத்திட கொஞ்சம் வாயே காதல் கரையோரம் கதை பேசிடலாமே தாம்பூலப் பழம் நிறைத்து அனுமதி கேட்டு வாரேன்
உனை காணக் கதிரும் வர உனக்காகக் குயிலும் வர விரைந்திங்கு வா எந்தன் கரம் சேர்ந்திட வா
நீயும் நானும் ஆடிப் பாட நதியலைகள் சந்தம் மீட்ட இசைத்திடவா உன்னில் உறைந்தே விடவா
மனம் வென்ற காதலியே எந்தன் உயிரும் உனதே உன்னோடு நான் வருவேன் நரை காணும் வரையே
நீ அணைத்ததும் என் வலிகளும் தன்னாலே பறந்தோட
மனம் நிறைந்திங்கு சிறகடிக்குது மானே எனையும் உனதருகில் தொலைத்திட கொஞ்சம் வாயே காதல் கரையோரம் கதை பேசிடலாமே தாம்பூலப் பழம் நிறைத்து அனுமதி கேட்டு வாரேன்