Avalale Naan

Lyrics: Raththiya Atputharajah Music: Raththiya Atputharajah/Roshan Pushpananthan/Theijevan Thambiaya கலைகளில் நான் உயிர் இசைகளில் தான் வரம் அளித்து விட்டான் அதில் தொலைந்ததும் நான் பிறந்தது யாழ் அந்த பெருமைகள் பார் இனி உலகமெல்லாம் ஒலி வடிவினிலில் நான் மனம் முழுதும் பல வரைபுகள் தான் வரை முறைகளை கடந்தன்று வளர்ந்தவள் தான் வரிகளில் பார் பல வலிகளும் காண் அட இருப்பினும் உதடுகள் சிரிப்பில் தான்
செல் ஒலிகளில் மெட்டு பல படித்தேன் அந்த மெட்டு உயிர் கொல்லும் என்றும் உணர்தேன் என் அன்னை மண்ணை கடந்தால் பிழைத்தேன் எங்கும் தேடி கல்வி தந்தாள் அன்று படித்தேன் அவள் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை அறிந்தேன் எந்தன் உயிரை கூட கொடுத்திடுவேன் இனி நான் நான் நான் நான் நான் நான்
அவன் விதை விதைதான் அதில் கரு வளர்த்தாள் அவள் உதிரத்தில் என் உயிர் வளர்த்து விட்டாள் அந்த இளமையிலே ஐந்து உயிருக்கு தாய் அவை யுத்தம் அழிக்காமல் தினம் பார்த்து வளர்த்தால் தலைவனும் பிரிந்தான் தொலை சிறை இருந்தான் இவள் இருப்பிடம் இன்றியே தவித்திருந்தாள் நடை பாதை பிணமாய் மனதெங்கும் ரணமாய் எம்மை அள்ளி அணைத்ததும் யுத்த மண்ணை கடந்தாள்
தனிமை கொல்ல அந்த தருணம் துணையும் இல்ல வறுமை கொல்ல மழையின் துளியில் தாகம் வெல்ல மடியில் பிள்ளை பசியில் அழுகை நிக்க வில்ல வலிகள் செல்ல எந்த வழியும் தெரியவில்லை
வலிகள் கடந்து வறுமை கடந்து மரணம் கடந்து வந்தேன் உயிரை அவனும் கொடுத்த காரணங்கள் கண்டு கொண்டேன் கடமை உண்டு என்னை காத்த அன்னை உன்னை தாங்க இசையில் நின்று உலகை வென்று ராணி போல பார்க்க
உயிரினை உனக்கென அளித்திடவா எந்தன் உதிரமும் உனக்கென துடிக்கிதாம்மா உந்தன் இளமையும் இழந்தது எமக்கல்லவா இனி எதை கொண்டு அடைப்பதேன் கடமையை நான்
கலைகளில் நான் உயிர் இசைகளில் தான் வரம் அளித்து விட்டான் அதில் தொலைந்ததும் நான் பிறந்தது யாழ் அந்த பெருமைகள் பார் இனி உலகமெல்லாம் ஒலி வடிவினிலில் நான் நான் நான் நான் நான் மனம் முழுதும் பல வரைபுகள் தான் வரை முறைகளை கடந்தன்று வளர்ந்தவள் தான் வரிகளில் பார் பல வலிகளும் காண் அட இருப்பினும் உதடுகள் சிரிப்பில் தான்