Adi Rasathi

Lyrics: Sam P Keerthan Music: Sam P Keerthan அடி ராசாத்தி! ராசாத்தி ராசாத்தி!!!
என் உசுருக்குள் நுழைஞ்ஜாயே எனைமாத்தி!
கருவிழியாலே நெஞ்சுக்குள் கொடியேத்தி
என கொல்லாம கொல்லுறா உசுப்பேத்தி
அடி ராசாத்தி அடி ராசாத்தி ராசாத்தி!
என் உசுருக்குள் நுழைஞ்ஜாயே எனைமாத்தி
தன்னந்தனி ஆளா எனை மறந்து விட்டுட்டு போனா
உள்ளுக்குள்ள தீயா நா தவிச்ச தவிப்பு வீணா
உன்ன எண்ணிதானா என் உள்ளமும் குதிக்கும் மீனா
பச்சதண்ணிதானா உன் எச்சில தித்திக்கும் தேனா
அடி தங்கத்த போல வைரத்த போல எனை பதுக்கிறியே!
என் நெஞ்சுகுழியில நித்தம் முழுகியே முத்துக்குளிக்கிறியே!
மனசெல்லாம் முளைக்குறியே!
உசுரோட கலக்குறியே!