Lyrics: Ku Karthik
Music: Gavaskar Avinash
பல்லவி
தீரரா தந்தீரரா தரலோக்கலா தடைமீறடா
ஆடடா பந்தாடடா களம் கற்றுபாரடா
மேகமா மழைத்தூறலா மிதியாடிவா நீ மாடலா
மான்னா மதிதாவுனா ஏன் கட்டுபாடன்னா
Hook
மக்கா நெஞ்ச தில்லாக்குடா
Sokka உள்ள தீயா எரிடா
ரெக்க ரெண்ட கையாக்குடா
தட்டி தூக்கு தொட்டா தெறிதா
சரணம் 1
மீசையோட ஆச போடும்
கூத்துதானே காதல்
கூந்தலுக்குள் கூடு கட்டும்
வயசுதா !
காதல் இன்றி சாதல் என்று
சொல்லிப்போகும் தூத்தல்
நீங்கிடாமல் நெஞ்சுக்குள்ள
ரவுசுதா !
நீர் போகும் வழியில் நிக்காதே
வா ஒலகத்தை ஒரசித்தா பாப்போமே
பூச்சாலை ஒன்ன செதுக்காதே
அட முள்சாலைப் பாடங்கள் மறக்காதே
சீறுடா... சீக்கிரோ .. ஏறுடா....
Hook
தில்லா தில்லா நீ மோதி வா
எட்டு வச்சா எல்லா தொறக்கும்
கல்லா முள்ளா நீ ஏறி வா
கட்டி வச்ச ஓ கால் பறக்கும்
சரணம் 2
நீயும் என்னை தீண்டிடாத
பாகம் என்னில் வேண்டாம்
ஆடை கூட பாரமாகி போகுதே
கூடல் இன்பம் கொஞ்ச நேரம்
காதல் இன்பம் நீளும்
பள்ளங்கள் பார்த்து கலங்காதே
அது இல்லாமல் ஏற்றங்கள் கிடையாதே
பேச பேச சொர்க்கமிங்கே ஊறுதே
சீறுடா... சீக்கிரம்.. ஏறுடா....
Hook
முத்துக்கள் கரையில் ஒதுங்காதே
உன் மூச்ச கொளுத்து நீ உறங்காதே
சையா சையா சையா ரையா
கைய தூக்கி முன்னால் வரியா
தையா தையா தையா ரையா
நெஞ்ச ஏத்தி வானம் தொடுய்யா