Ilaignyaney

Lyrics: Deepakram J இளைஞனே நீ மாறாத வரையிலும் மாறாது இந்தியாவும் நீதானே முதுகெலும்பு பின் ஏனோ கூன் விழுகுது நேரங்கள் வீணாகுது காலங்கள் எங்கோ போகுது அறிவியலும் அரசியலும் விண்ணை தாண்டி போகுது தொலைபேசியில் உலகை அடைத்து அது உலகம் என்று நினைத்து அது உன்னை சிறைபிடித்து அறியாமை தண்டனை உனக்கு கொடுத்தது அடிமையா செல்போன் செயலிக்கு தடை செய்தால் தற்கொலை முடிவா Pubg தான் வாழ்க்கையின் படிப்பா ராணுவ வீரனை கொஞ்சமாது மதிப்பா இது ஒரு கொடுமையே நம் முடிவில் இல்லை வலிமையே ஒற்றுமை இல்லை ஒழுக்கம் இல்லை வலைத்தளத்தில் சண்டை சண்டை ஒற்றுமை இல்லை ஒழுக்கம் இல்லை onlineyil சண்டை சண்டை தலைவருக்கு வைத்தோம் சிலை அதை அவமானப்படுத்துர சிலரை அவருக்கு எங்கே தண்டனை நாட்டில் இது தான் பெரிய வேதனை தொலைநோக்கு பார்வை வேண்டும் பகுத்தறிவு நமக்கு வேண்டும் சொல்லியவரின் சிலை மேலே சாயம் சாயம் காவிச்சாயம் அயோத்திதாசரும், பகுத்தறிவாதியும், சட்ட மேதையும், காமராஜரும்,சேகுவேராவும், காஸ்ட்ரோவும், கற்றுக் கொடுத்ததோ மனித நேயம் நீ கற்றுக்கொண்டதோ மதவாதம் கற்றுக் கொடுத்ததோ மனிதநேயம் நீ கற்றுக்கொண்டதோ மதவாதம் மத மத மத மதவாதம் இந்த மண்ணில் இது ஒரு பெரியவாதம் பல பல தலைவர்கள் வந்தாலும் எங்கே நாம் திருந்தப் போகிறோம் மத மத மத மதவாதம் இந்த மண்ணில் இது ஒரு பெரியவாதம் பல பல தலைவர்கள் வந்தாலும் எங்கே நாம் திருந்தப் போகிறோம்.