Lyrics: Nichalean Mahendrasingham
Music: Nichalean Mahendrasingham
ஹோ மாயமே ஹோ மாயமே
காதல் தாகமே
உயிர் காட்டிலே நான் அலையவே
துணையாய் மாறிடு
மென் தீயிடை உன் மேனியே
என் காந்தள் மேகமே
நான் வாங்கிய உன் மூச்சிலே
அழல் சுடராய் எரிகிறேன்
ஹோ சாமரா ஹோ சாமரா
யான் தேடும் போதையே
எஞ்சலே நீ கொஞ்லே
உன் காதல் தஞ்சமே
நீ என் ஈர மழைத்துளிதான்
உன் சாரல் வேண்டி நானும்
பிள்ளையானேன்
நான் ஓர் பருவ உயிர்நிலைதான்
உன் காதல் கொள்ள நான்
முகிலே
என் நெஞ்சிலே நீ துஞ்சலே
இனி மாறும் தேக நிலை
வா நின் மொழிகளால்
என் கவிதையுள் பொருள் சேருமோ
நுதலே
நான் நுகர்ந்திட
வெண் நளினமே மெல்லக் குழையுதோ
சகியே துகில் சரியவே
ரதம் ஆகினாய் நான் கலைஞனோ
தினம் ஏக்கம் கூட்டினாய்
ஒரு தீண்டலாக மாறினாய்
நான் ஏங்கித் தொலைகிறேன்
சிறு கூடல் கொண்டே ஏந்துவாய்
ஓ சாமரா காதலா மோதவா
நானுந்தன் மூங்கிலா எனை மீட்டிடு
ஓ ஜீவனே தேயுதே காயுதே
இதழ்களே வரமென சுகம் கூட்டிடு