Lyrics: Rathya Atputharajah Music: Mirun Pradhap தனிமையில் அவள் நொடி கழித்திருந்தாள் வெறுமையில் மனமது வெறுத்திருந்தாள் நிமிடங்கள் குறுக்கிடும் நொடியது கொடியது விடியலலை தேடிடும் பொழுதுகளே
இளமையில் கனவினில் திளைத்திருந்தாள் விதி எது என மனம் தவித்திருந்தாள் கொடுமையில் வறுமையில் குணம் அது மாறியும் கனவுகள் அவளிடம் மாறவில்லை
சதி பொறுத்தாள் பழி சுமந்தாள் மறை பகை சில அறிந்தாள் அதில் தெளிந்தால் கனவுகள் மனதில் வைத்தாள் உரம் கொடுத்தாள் அனலென எரிய விட்டாள் அதில் எரிந்தாள் பல தடை உடைத்தெறிந்தாள் விடை அறிந்தாள் பிரிவுகள் பல கடந்தாள் விழி நனைத்தாள் வலியிலும் துணித்திருந்தாள் பிழைத்திருந்தாள் உயரங்கள் அடைந்திடத்தான் அவள் நினைத்தாள் உழைத்தாள்
உயரங்கள் ஏறிட துயரங்கள் தாங்கணும் பயணங்கள் நீண்டிட பயமது நீங்கணும் உலகுணை போற்றிட உழைப்பினி ஆயுதம் உனக்குள்ளே வலி அது உரம் என ஆகணும்
உயிரெனினை திறந்திட நாட்களும் தூண்டிடும் ஒரு பிடி கனவது வாழ்த்திட ஏங்கிடும் ஊர் பிழை சொல்லிடும் கேலிகள் வீசிடும் இது ஒரு போர்க்களம் போலிங்கு ஆகிடும்
அடிமை எண்ணம் இனி தேவையில்லை உந்தன் தனிமை கூட இங்கு பாரமில்லை கரையை சேராத அலைகள் இல்லை ஒரு மாற்றம் காணாத வாழ்கை இல்லை
எண்ணம் போல் வாழ்க்கை என்றானதே இன்பமே எங்கே கண் தேடுதே கனவுகள் எல்லாம் கரை சேருமே நாம் நினைத்தால்
பிறக்கையில் தலையினில் எழுதி விட்டான் பிறவியின் பலனதை அளித்திடுவான் கர்மத்தின் கணக்குகள் முடித்தினி விரும்பிடும் விடுதலை வரமென அளித்திடுவான்
பயந்திடும் விடயங்கள் துணிந்து நீ செய் புது புது விடயத்தில் உன் வாழ்க்கை இலக்குகள் அளவினில் மலையென இருக்கணும் நினைக்கியில் உதிரமும் துடிக்கணும்
துணிவு கொண்டாள் இனி எழுவாள் வரங்களை அவள் பெறுவாள் துயர் களைவாள் பல முகம் அவள் அறிந்தாள் தள்ளி நடந்தாள் உணர்ச்சிகள் விலக்கி வைத்தாள் காதல் வெறுத்தாள் கனவினை அவள் வளர்த்தாள் மலையெனதான் பிறவியின் பலன் அறிந்தாள் புகழ் அடைந்தாள் திமிரதை உடுத்திருந்தாள் உடையென தான் செவிகளை அடைத்து வைத்தாள் குறை எதிர்த்தாள் தவிர்த்தாள்
இளமை காலங்கள் இழந்து வாடாதே கனவு கை சேர கண்கள் மூடாதே இருக்கும் நாள் மட்டும் இருளில் மூழ்காதே இங்கு ஏன் வந்தோம் கர்மம் விடை தானே
உலகம் பழித்தாலும் ஊமையாகாதே உரிமை இருந்தாலும் உறவை நாடாதே உலகம் அழிந்தாலும் உண்மை மாறாதே உயரம் அடைந்தாலும் உதவி மறக்காதே
அடிமை எண்ணம் இனி தேவையில்லை உந்தன் தனிமை கூட இங்கு பாரமில்லை கரையை சேராத அலைகள் இல்லை ஒரு மாற்றம் காணாத வாழ்கை இல்லை
எண்ணம் போல் வாழ்க்கை என்றானதே இன்பமே எங்கே கண் தேடுதே கனவுகள் எல்லாம் கரை சேருமே நாம் நினைத்தால்