Orr vali uyire

Lyrics: Dev Samrat Music: Nilukshan Nilu உயிரே எப்போதுமே விலகாதே நீ வேண்டும் கண்ணே அடியே உன் நினைவிலே தினம் எரிகிறேனே நானே
தனியே நான் போகயில் நிழலாகவே நீ வேண்டும் பெண்ணே ஒளியே நீ நீங்கினால் வலி ஏற்கிறேன் நானே..
தேன்னிசையே உன் குரல் கேட்க நானும் வந்தேன் ஆனால் என் இசையில் இன்றென்னை ஆற்றி கொள்கிறேன்
நீ வரவே தனிமையில் நானுமிங்கு பாடுறேனே தேவதையே தினமுன்னைத் தேடுறேனே நான்
ஒரு வலி உயிரே உன்னாலே இதயத்தை துகளாய்ச் செய்தாயே உயிர்வலி உணரச் செய்தாயே என் ஜீவனே… காதலை நெஞ்சில் கொண்டேனே நட்பினை பக்கம் வைத்தேனே ரெண்டையும் ஒன்றாய் கண்டாயே என் காதலே…
என் இமை மூடிடவே நினைவும் என்னை சேர்கிறதே
என்னையே முழுதாய் புதிதாக மாற்றினாய் குழந்தை மொழியில் திமிராக பேசினாய் மனதோடு மெல்ல பேசும் குளிராக நீயும் வீசு இதழோர சண்டை போடும் இதயம்தான்….அன்பே...
ஒரு வலி உயிரே உன்னாலே இதயத்தை துகளாய்ச் செய்தாயே உயிர்வலி உணரச் செய்தாயே என் ஜீவனே… காதலை நெஞ்சில் கொண்டேனே நட்பினை பக்கம் வைத்தேனே ரெண்டையும் ஒன்றாய் கண்டாயே என் காதலே…