Thenkizhakku (From "Vaazhai")

Lyrics: Yugabharathi Music: Santhosh Narayanan தென்கிழக்கு தேன் சிட்டு செம்பருத்திப்பூ மொட்டு செல்லங்கொஞ்சுதே தாலாட்ட எத்தனையோ காலம் வாராத வானவில் வந்தது போல் நீ பேச உச்சியில நீந்தும் ஆகாச மீன் என துள்ளிடுதே உன் ஆச மழை அடிக்கும் உன் சிரிப்பில் செடி மொளைக்கும் நான் பூவாக வெயில் அடிக்கும் நாள் வரைக்கும் கொட புடிப்பேன் உன் தாயாக நீ நீ சொல்லும் கத நான் நான் கேட்கும் வர நாமாவோம் மாயப் பறவைகளே தென்கிழக்கு தேன் சிட்டு செம்பருத்திப்பூ மொட்டு செல்லங்கொஞ்சுதே தாலாட்ட ஒத்தையில போகும் வெட்டவெளி மேகம் மெட்டெடுத்து பாடாதோ றெக்க விரிச்சு சித்தறும்பு போடும் நட்சத்திரக் கோலம் சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு தெரிஞ்சே நீ செய்யும் சேட்ட தெளிவாக உன்ன காட்ட அதில் கோடி ராகம் நானும் மீட்ட தெருவெங்கும் தேர ஓட்ட மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட பெறுகாதோ காலம் வேகம் கூட்ட பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கெண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கெண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு (பனங்கறுக்கும்) நீ நீ சொல்லும் கத (பால் சுரக்கும்) நான் நான் கேட்கும் வர (அத நெனச்சே நீ கெண்டாடு) நாமாவோம் மாயப் பறவைகளே (பசி மறக்கும்) நீ நீ சொல்லும் கத (நாள் பிறக்கும்) நான் நான் கேட்கும் வர (வலி மறந்தே நீ கூத்தாடு) நாமாவோம் மாயப் பறவைகளே பனங்கறுக்கும் பால் சுரக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு