Urugaatha (Vaalarrivan)

Lyrics: Kathiravan Udayakumar Music: R Sanjay/Kathiravan Udayakumar உருகாத மனமும் உண்டோ உருகாத மனமும் உண்டோ உன்னைக் கண்டு உருகாத மனமும் உண்டோ உன்னை நினைத்து உருகாத மனமும் உண்டோ
திரைபோட்டு மறைத்தாலும் மறையிட்டுத் தடுத்தாலும் அதிகாரம் திளைத்தாலும் விதிரூபம் எடுத்தாலும் வினைதடை விதித்தாலும்
சிலையாக நின்றாலும் ஒளியாக மலர்ந்தாலும் மலராகப் பிறந்தாலும் மணமாக விரிந்தாலும்
கலையாக வடித்தாலும் சுவையாகக் கனிதந்தாலும் நிழலாக நின்றாலும் மொழியாக இனித்தாலும்
விஞ்ஞானம் அறிந்தாலும் மெய்ஞ்ஞானம் உணர்ந்தாலும் காலத்தைக் கடந்தாலும் பலரூபம் எடுத்த தாலும்