Lyrics: Amirtharupan sarmisan Music: Thirunavukarasu Bharathi யாரடியோ நீ யாரடியோ காதலியோ நீ என் காதலியோ
ஒரு வார்த்தை நீ பேசி எனை கொன்றதேனடி உயிரோடு எனை நீயும் புதைத்தாயடி. நீ இன்றி நான் வாழ வழி இங்கு ஏதடி உன்னோடு நான் சேர வழி சொல்லடி
எதுக்குனு நீ கூட வந்த பாதியில போகாத என்னை விட்டு நீ போன, எந்தன் மனம் தாங்காதே
என்னோட காதலை உன் கையில கொடுத்தேனே, நீ விட்டு போகயில் எங்கேயோ தொலைந்தேனே.
தொலைந்தேனே… தொலைந்தேனே… உன்னால் நானும் தொலைந்தேனே. கரைந்தேனே… கரைந்தேனே… என்னுள் நானும் கரைந்தேனே.
யாரடியோ நீ யாரடியோ காதலியோ நீ என் காதலியோ
இன்னும் ஒரு ஜென்மம் இருந்தா உன்னை தேடி வருவேனே. அங்கேயும் நீ இல்லையென்றால் உயிர் நீங்கி போவேனே.
என்னோட காதலை நானே இங்கு தொலைத்தேனே. உயிரோடு நான் உன்னை மண்ணோடு புதைத்தேனே.
விதி இல்லை இது சத்தியா என்னை நானே கேட்டேனே, கதையா இது தொடர் கதையா விடைகள் தேடி அலைந்தேனே.
யாரடியோ நீ யாரடியோ காதலியோ நீ என் காதலியோ
ஒரு வார்த்தை நீ பேசி எனை கொன்றதேனடி உயிரோடு எனை நீயும் புதைத்தாயடி.