Lyrics: Sathees Kanth
Music: Nichalean Mahendrasingham
காதல் அது இனிய தொல்லை
இவள் யாரோ என்று தெரியவில்லை
பெண் பார்வை என்றும் புரிவதில்லை
நீ மின்னல் தேவதை
காதல் அது இனிய தொல்லை
இவள் யாரோ என்று தெரியவில்லை
பெண் பார்வை என்றும் புரிவதில்லை
நீ மின்னல் தேவதை!
கால்கள் ஏன் நகரவில்லை
என் பூமி இன்று சுழலவில்லை
இவன் நெஞ்சம் ஏன் துடிக்கவில்லை
இது காதல் வானிலை
உன் முகம் உன் முகம் பார்க்கவே
எந்தன் கண்கள் பனிக்குதே
என் உயிரில் இனிக்குதே
எதிரில் வந்திடு!
உன்னிடம் உன்னிடம் சேர்க்கவே
எந்தன் காதல் கோர்க்கிறேன்
எஞ்சும் ஜுவன் தீரும் முன்
வார்த்தை தந்திடு!
காதல் அது இனிய தொல்லை
இவள் யாரோ என்று தெரியவில்லை
பெண் பார்வை என்றும் புரிவதில்லை
நீ மின்னல் தேவதை
பூவில் தீயாய்
என் இதயம் வாட்டினாய்
காதல் ராகம்
என் நரம்பில் மீட்டினாய்!
வேண்டாம் என்றே
நான் விலகிச் செல்லவே
மீள் நுழைந்தாய்
பூங்கனவாய்!
எந்தன் தோட்டத்தில்
வேரும் பூப்பூக்கும்
உந்தன் அருகில் நான் சென்றாலே!
நிற்கும் உன் ஓரம்
உணர்ந்தேன் மின்சாரம்
அணலாய் ஒளிர்ந்தேன் நான் என்னுள்ளே
உந்தன் கனா தீண்டாமல்
எந்தன் விழி மூடாதே!
உந்தன் மடி சாயாமல்
எந்தன் விதியும் ஓயாதே!
குளிர் மழை உன் வார்த்தை
சுடும் வெயில் உன் பார்வை
அதில் தவித்தேன் நான் தினமே!
காதல் தனிமை
முள் சிறையானதே
உயிர் கரை சேரவே வாராய் அன்பே!
காதல் அது இனிய தொல்லை
இவள் யாரோ என்று தெரியவில்லை
பெண் பார்வை என்றும் புரிவதில்லை
நீ மின்னல் தேவதை!
கால்கள் ஏன் நகரவில்லை
என் பூமி இன்று சுழலவில்லை
இவன் நெஞ்சம் ஏன் துடிக்கவில்லை
இது காதல் வானிலை
பூவில் தீயாய்
என் இதயம் வாட்டினாய்
காதல் ராகம்
என் நரம்பில் மீட்டினாய்!
வேண்டாம் என்றே
நான் விலகிச் செல்லவே
மீள் நுழைந்தாய்
பூங்கனவாய்!
காதல் அது இனிய தொல்லை
இவன் யாரோ என்று தெரியவில்லை
இவன் பார்வை என்றும் புரிவதில்லை
நான் உந்தன் தேவதை!
கால்கள் ஏன் நகரவில்லை
என் பூமி இன்று சுழலவில்லை
இவள் நெஞ்சம் ஏன் துடிக்கவில்லை
இது காதல் வானிலை!