Lyrics: Uma Devi Music: Govind Vasantha ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே அதிரும் பறையாய் இதயம் ஆடுதே உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே உன் ஊர் தாண்டிடும் ரெயில் பாலம் மேல் என் பூமி முடிந்து விடுதே என் தாயோடும் கூறாத வார்த்தைக்குள் நான் நீந்துறேன் காந்துறேன் கனாக்காணும் போர்வைக்குள் காலத்த அடைகாக்குறேன் தேக்குறேன் மண்மேலோடும் மழைத்தண்ணி போல் நாளும் நிலமாறுறேன் தூருறேன் பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ நீ வாக்குற காக்குற கோடி வாசங்கள் எனை தீண்டி போனாலும் உயிரை தீண்டாதோ உன் வாசம் பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை காதல் ஒன்றே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே