Lyrics: Sri Ranganathan Shyamalangan Music: Sri Ranganathan Shyamalangan/Mauran Muralitharan நெருப்பான மழையில் நனைகின்ற நிலமா? தணல் பூத்த தரையில் மலர் பூக்குமா? அணையாத நினைவில் ஒளிராத கனவில் எதிர்கால விடியல் ஒளியூற்றுமா?
வாராமல் போனோரைக் பாரா நிலம் - இது காணாமல் ஆனோர்கள் வாரா நிலம் வேரோடு போர்க்காயம் ஆறா நிலம் - இது போரோடு போர் சார்ந்த ஆறாம் நிலம்
நெருப்போட மல்லுக்கட்டி குருத்தோலை வாடுதம்மா குருத்தோலை காவலுக்கு காவோலை வாழுதம்மா பூவோடு பெண்குருத்து வேரறுந்து வாழ்ந்திருக்கு சாவோடு கைபிடித்து காவோலை காத்திருக்கு
காத்திருந்த காவோலை காற்றோடு கலந்ததென்ன பூத்திருந்த பூவொன்று புயலோடு தனிச்சதென்ன பூவோ தனிச்சிருக்கு பட்டழிந்த பாழ்நிலத்தில் வாழ்வோ துளிர்த்திருக்கு சப்பாத்துக் காலிடுக்கில்
போர் ஏவும் தீ நெஞ்சில் ஈரம் விழும் வாழ்வோடு வாழ்வூறும் ஆறாம் நிலம்